தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பட்ஜெட்டில் அத்திக்கடவு - திட்டம் குறித்து புதிய அறிவிப்பு இல்லை: மூன்று மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்

பட்ஜெட்டில் அத்திக்கடவு - திட்டம் குறித்து புதிய அறிவிப்பு இல்லை: மூன்று மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்

பட்ஜெட்டில் அத்திக்கடவு - திட்டம் குறித்து புதிய அறிவிப்பு இல்லை: மூன்று மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்


UPDATED : ஆக 10, 2026 08:36 PM

ADDED : ஆக 10, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 08:36 PM ADDED : ஆக 10, 2026 08:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக, பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளின், 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஆயிரத்து, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. அதன் பின் ஆட்சி மாற்றம் காரணமாக, தி.மு.க., ஆட்சியில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், திட்டம் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பவானி ஆற்று நீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம். 60 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு, கடந்த, 2019 ல் அ.தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆண்டு தோறும், 1.50 டி.எம்.சி., நீரை குழாய் வழியே எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது. பல இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டன. மூன்று மாவட்டங்களில் உள்ள, 1,045 நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. 1, 914 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சியில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், முழுமையாக திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பல நீர் நிலைகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. விடுபட்ட நீர் நிலைகளை இரண்டாவது திட்டத்தில் இணைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கும் தீர்வு கிடைக்கவில்லை. அடுத்தடுத்து வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதே தவிர, திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், புதிதாக த.வெ.க., அரசு பொறுப்புக்கு வந்தது. புதிய அரசிடமும், எம்.எல்.ஏ., க்களிடம் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை விடுத்து வந்தோம். பட்ஜெட்டில் அத்திக்கடவு திட்டம் குறித்து புதிய அறிவிப்புகள், வழிகாட்டுதல்கள், நிதி ஒதுக்கீடு, திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால், நாங்கள் ஏமாற்றமடைந்து உள்ளோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் குறித்து ஏதாவது ஒரு தகவலாவது வெளியிடப்படும் என, எதிர்பார்த்திருந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

பட்ஜெட் விவாதம் நடைபெறும் போதாவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் குறித்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பேசுவார்களா என, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us