/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடமாநில தொழிலாளர்கள் வேண்டாம்! கலாசு தொழிலாளர்கள் வலியுறுத்தல்
/
வடமாநில தொழிலாளர்கள் வேண்டாம்! கலாசு தொழிலாளர்கள் வலியுறுத்தல்
வடமாநில தொழிலாளர்கள் வேண்டாம்! கலாசு தொழிலாளர்கள் வலியுறுத்தல்
வடமாநில தொழிலாளர்கள் வேண்டாம்! கலாசு தொழிலாளர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 19, 2025 11:25 PM

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சியில் சரக்குகளை இறக்குவதில் வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டாம்,' என, கலாசு தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அதில், நேரு நகர் கலாசு தொழிலாளர்கள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோட்டூர் ரோடு, நேரு நகர் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு லாரியில் வரும் சரக்குகளை ஏற்றி, இறக்கும் தொழிலை செய்து வருகிறோம்.
அங்குள்ள வணிக நிறுவனங்களில், லோடுகளை ஏற்றி வந்தாலும், ஒரு நிறுவனம் மட்டும் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து சரக்குகளை இறக்குகின்றனர். இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* த.வெ.க., கோவை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், 'பொள்ளாச்சி நகராட்சி, 20வது வார்டு கரியகாளியம்மன் கோவில் வீதியில், 70 வீடுகள் உள்ளன. இங்குள்ள சாக்கடைகளில் மண் நிரம்பியுள்ளதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது.
இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இங்குள்ள இரும்பு மின்கம்பங்களும் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. அவற்றை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிடப்பட்டுள்ளது.