யாருக்கும் சளைத்தவர்களில்லை சீறிக்கிளம்பிய சீனியர் சிட்டிசன்கள்
யாருக்கும் சளைத்தவர்களில்லை சீறிக்கிளம்பிய சீனியர் சிட்டிசன்கள்
ADDED : செப் 20, 2026 06:02 PM
கோவை: மாவட்ட மூத்தோர் தடகள சங்கம்(கே.டி.எம்.ஏ.ஏ.,) சார்பில் மூத்தோர் தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன.
30 முதல் 80 வயதுடைய ஆண்கள் 274 பேர், பெண்கள் 164 பேர் என, 438 பேர் சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்தனர்.
அதாவது, 100 மீ., 200 மீ., 1,500 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் இளைஞர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என இருபாலரும் சுறுசுறுப்புடன் விளையாடினர்.
குண்டு எறிதல், நீளம் தாண்டுதலில் அவர்கள் வெளிப்படுத்திய திறமை, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 80 வயதை கடந்த ஞான ஹெப்சிபா, அம்மாக்குட்டி, கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் குண்டு எறிதலில் அசத்தினர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, போட்டிகளை துவக்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் வேலுச்சாமி, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
