/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடைகளில் அடையாளம் இல்லை; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
/
வேகத்தடைகளில் அடையாளம் இல்லை; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
வேகத்தடைகளில் அடையாளம் இல்லை; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
வேகத்தடைகளில் அடையாளம் இல்லை; வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு
ADDED : ஆக 17, 2025 10:15 PM

பகலில் எரியும் தெரு விளக்கு கோவில்பாளையம் - நெகமம் செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் பகல் நேரத்தில் ஒளிர்ந்த படி உள்ளது. இதனால் மின்சாரம் வீணாகும் நிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் பகல் நேரத்தில் தெருவிளக்கு ஒளிர்வதை கட்டுப்படுத்த தினமும் நேரில் பார்வையிட்டு கட்டுப்படுத்த வேண்டும்.
-- ரமேஷ், கோவில்பாளையம்.
மீண்டும் குப்பை கிணத்துக்கடவு - சொக்கனூர் ரோடு சிக்கலாம்பாளையம் பயணியர் நிழற்கூரை அருகே, ரோட்டின் ஓரம் அளவு கடந்த குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றம் செய்தாலும் மீண்டும் இங்கு குப்பை கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
இதை தடுக்க இங்கு குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.
-- சங்கர், சொக்கனூர்.
வேகத்தடை தெரியலை பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் இருக்கும் வேகத்தடைகளில், மஞ்சள் மற்றும் வெள்ளை கோடுகள் இல்லாததால், இரவு நேர வாகன ஓட்டுனர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாறி செல்கிறார்கள். எனவே, இப்பகுதியில் உள்ள வேகத்தடைகளில் வண்ணம் பூச வேண்டும்.
-- சேகர், பொள்ளாச்சி.
மின் கம்பத்தை அகற்றணும் கிணத்துக்கடவு, பெரியார் நகரில் குடியிருப்பு அருகே பழைய மின்கம்பம் குப்பை போன்று போடப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் புற்கள் முளைத்து கம்பம் இருப்பது தெரியாத படி மறைத்துள்ளது. இதை மின்வாரியத் துறை அதிகாரிகள் கவனித்து உடனடியாக மின்கம்பத்தை விரைவில் அகற்ற வேண்டும்.
-- கண்ணன், கிணத்துக்கடவு.
ரோட்டோரம் சாக்கடை நீர் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், தனியார் கடை அருகே கழிவு நீர் சர்வீஸ் ரோட்டில் வழிந்தோடிய படி இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வழியாக பயணிக்க சிரமம் ஏற்படுகிறது. இத்துடன் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- பெருமாள், கிணத்துக்கடவு.
தெருவிளக்குகள் எரிவதில்லை உடுமலை, காந்திநகர் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதியில் மக்கள் வெளியில் நடந்துசெல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருளாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- சக்தி, உடுமலை.
கொசுத்தொல்லை உடுமலை, பழனியாண்டவர் நகர் சுரங்கபாதையில் பயன்படுத்த முடியாமல் கழிவுகள் நிறைந்துள்ளது. இதனால் சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புகளில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவுகளை சுத்தம் செய்வதற்கும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேந்திரன், உடுமலை.
விதிமீறும் வாகனங்கள் உடுமலை, தாராபுரம் ரோடு சிவசக்தி காலனி அருகே வாகனங்கள் அதிவேகமாக வந்து திரும்புகின்றன. மாலை நேரங்களில் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. ரோட்டை கடப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல் வதற்கு இடையூறாக உள்ளது.
- பவானி, உடுமலை.
இருக்கை இல்லை உடுமலை புதிய பஸ் ஸ்டாண்டில் பழநி பஸ்கள் நிற்குமிடத்தில் நிழற்கூரை இல்லை. இதனால், பயணியர் ரேக்குகளில் அமர வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், உடுமலை.
நாய்த்தொல்லை உடுமலை, பி.வி., லே - அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுநர்களை தொடர்ந்து துரத்தி அச்சுறுத்துகின்றன. ரோட்டில் விளையாடும் குழந்தைகளை விரட்டி கிழே விழச்செய்கின்றன. வாகனங்களின் குறுக்கே அடிக்கடி வருவதால் ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
- ராம்குமார், உடுமலை.
நெடுஞ்சாலையில் வாகனங்கள் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பழநி ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே, விதிமீறி வாகனங்கள் நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.