/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனை அருகே வேகத்தடை இல்லை; விபத்து அபாயம்
/
மருத்துவமனை அருகே வேகத்தடை இல்லை; விபத்து அபாயம்
ADDED : அக் 12, 2025 10:27 PM

வேகத்தடை வருமா
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ரோட்டின் இருபுறங்களிலும், வாகனங்கள் அதிக அளவு வேகத்தில் செல்வதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.
-- ராஜ், பொள்ளாச்சி.
போலீஸ் எச்சரிக்கை மீறல்
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி செம்பா கவுண்டர் காலனி செல்லும் ரோட்டின் ஓரத்தில் 'விளம்பர பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது' என போலீசாரால் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தனியார் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை போலீசார் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- நரி முருகன், சூளேஸ்வரன்பட்டி.
நிழற்கூரை சேதம் வடசித்துாரிலிருந்து நெகமம் செல்லும் வழியில் உள்ள நிழற்கூரை மேற்பகுதி கான்கிரீட் பூச்சுக்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் இங்கு நிற்கும் பயணியர் பலர் எப்போது மேற்கூரை கீழே விழும் என்ற அச்சத்துடன் நிற்கின்றனர். எனவே, ஒன்றிய நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- மனோஜ், நெகமம்.
ரோட்டில் கழிவுநீர் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு, அரசு பள்ளி அருகே உள்ள தனியார் வணிக வளாகம் முன் கழிவு நீர் குளம் போல் கடந்த 10 நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவது உடன் நோய் தொற்று அபாயம் அதிக அளவில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ராஜ்குமார், கிணத்துக்கடவு.
ரோட்டில் குழி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சர்ச் ரோட்டில் இருந்து, பொள்ளாச்சி கோவை ரோட்டுக்கு செல்லும் வழியில் குழி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
ரோட்டை புதுப்பிக்கணும் விருகல்பட்டி வல்லக்குண்டாபுரம் ரோடு புதுப்பிக்க தோண்டப்பட்டது. ஆனால் ரோடு போடவில்லை. இதனால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
இருளில் கச்சேரி வீதி உடுமலை கச்சேரி வீதியில் மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால், அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, எரியாத மின்விளக்குகள் எரிய மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், உடுமலை.
சுகாதாரக்கேடு உடுமலை ராஜேந்திரா ரோடு இறைச்சிக்கடைகள் திறந்தவெளியில் இறைச்சி தொங்கவிட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோமு, உடுமலை.
பராமரிப்பு இல்லை உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் ஆண்கள் கழிப்பிடம் பராமரில்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பயணியர் இதை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, கழிப்பிடத்தை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவி, உடுமலை.
அடையாளமில்லை உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட வேகத்தடைக்கு வெள்ளைக்கோடு போடாமல் அடையாளமில்லாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வேகத்தடைக்கு அடையாளமிட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
செயல்படாத சிக்னல் உடுமலை -- பொள்ளாச்சி ரோட்டில் தானியங்கி சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் குழப்பமடைகின்றனர். விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிக்னல் செயல்பட போலீசார், நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தரம், உடுமலை.