/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடக்கு மாரியம்மன் கோவில் திருவிழா
/
வடக்கு மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED : மார் 26, 2025 10:20 PM
சூலுார்:
சூலுார் வடக்கு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா, வரும், ஏப். 9 ம்தேதி நடக்கிறது.
சூலுார் மார்க்கெட் ரோட்டில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, நேற்று முன் தினம், இரவு சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. வரும், ஏப்., 1 ம்தேதி அக்னி கம்பம் நடப்படுகிறது. வரும், 8 ம்தேதி வரை,தினமும் அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.
ஏப்., 4 ம்தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏப்., 9 ம்தேதி காலை, 11:00 மணிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து பால், தீர்த்தக் குடங்கள் எடுத்து அம்மை அழைத்தலும் நடக்கிறது. தொடர்ந்து, அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.
மதியம் அன்னதானமும், மாலை மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. 15 ம்தேதி இரவு மகா முனி பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.