/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாறு நாள் வேலைக்கு சம்பளம் கொடுக்கல! சப்-கலெக்டரிடம் புகார் மனு
/
நுாறு நாள் வேலைக்கு சம்பளம் கொடுக்கல! சப்-கலெக்டரிடம் புகார் மனு
நுாறு நாள் வேலைக்கு சம்பளம் கொடுக்கல! சப்-கலெக்டரிடம் புகார் மனு
நுாறு நாள் வேலைக்கு சம்பளம் கொடுக்கல! சப்-கலெக்டரிடம் புகார் மனு
ADDED : மார் 18, 2025 11:11 PM

பொள்ளாச்சி; 'தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, குறைதீர் நாள் கூட்டத்துக்கு, சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
* பா.ஜ., திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வபிரபு சார்பில் மனுவில், 'தென்னையில் தற்போது, வெள்ளை ஈ, கேரளா வேர்வாடல் நோய் மிகவும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தென்னை சாகுபடி முற்றிலும் கைவிடப்பட்டு, பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே, வெள்ளை ஈ, கேரளா வேர்வாடல் நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பா.ஜ., ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் கொடுத்த மனுவில், 'மாக்கினாம்பட்டி ரோட்டில், கல்லுாரி அருகே குப்பை கொட்டப்படுகிறது. பரா மரிப்பின்றி கிடப்பதுடன், பல மருத்துவ கழிவுகளும், வீட்டில் சேகரிக்கப்படும் கழிவுகளும் கொட்டப்படுவதால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குப்பையை முறையாக அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
*நல்லுாத்துக்குளி பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'நல்லுாத்துக் குளியில் பட்டா கொடுக்கப்பட்ட இடங்களில் குடியிருக்கிறோம். இதுவரை, எந்த அரசு நலத்திட்ட உதவிகளும் சரி வர கிடைக்கவில்லை. ரோடு முழுவதும் புதர் மண்டி விஷ பூச்சிகள் அதிகமாக உள்ளது. குடியிருப்புக்கு அருகே உள்ள நடைபாதை புதர் மண்டியுள்ளது. நடைபாதையை சரி செய்து தர வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.
* அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி தெற்கு ஒனறியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், பயனாளிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும்.
தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், 20 ஆண்டுகள் முதல், 40 ஆண்டுகளுக்கு முன், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிப்பதற்காக தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இவை தற்போது, பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. வீடுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.