/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இப்போதைக்கு இல்ல! கைவிரித்தது பாலக்காடு கோட்ட நிர்வாகம்; ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தி
/
இப்போதைக்கு இல்ல! கைவிரித்தது பாலக்காடு கோட்ட நிர்வாகம்; ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தி
இப்போதைக்கு இல்ல! கைவிரித்தது பாலக்காடு கோட்ட நிர்வாகம்; ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தி
இப்போதைக்கு இல்ல! கைவிரித்தது பாலக்காடு கோட்ட நிர்வாகம்; ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் அதிருப்தி
ADDED : அக் 18, 2024 10:37 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மூடிய முன்பதிவு மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பாலக்காடு கோட்ட மேலாளரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்த, இரண்டு கவுன்டர்களில் முன்பதிவு கவுன்டர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கடந்த, 2ம் தேதி மூடப்பட்டது. அனைத்து விதமான டிக்கெட்டுகள் பதிவு, டிக்கெட் விற்பனை என அனைத்தும், ஒரு கவுன்டரிலேயே மேற்கொள்வதால் பயணியர் அதிருப்தி அடைந்தனர்.
ரயில்வே நிர்வாகத்தின் இச்செயலுக்கு, பயணியர் நலச்சங்கம், அரசியல் சமூக இயக்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காரணம் சொல்லறாங்க
அதில், பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அனுப்பி, மூடப்பட்ட கவுன்டரை திறக்க வலியுறுத்தினர். அதற்கு பாலக்காடு ரயில்வே கோட்டம் அனுப்பிய பதிலில், 'முன்பதிவு மையங்களில், ஒரு ஷிப்ட்க்கு குறைந்த பட்சம், 140 முன்பதிவு படிவங்கள் வர வேண்டும். ஆனால், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஒரு ஷிப்ட்க்கு சராசரியாக, 80 படிவங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
இதை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த கவுன்டராக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள ஒரு, கவுன்டர் காலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
தட்கல் டிக்கெட் உட்பட, காலை 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி, 'யுடிஎஸ்' டிக்கெட் வழங்க பொள்ளாச்சி 'ஏடிவிஎம்' கவுன்டரும் செயல்படுகிறது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், தற்போது அம்ரித் பாரத் ரயில் நிலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்து, புதிய ரயில்களை அறிமுகப்படுத்தியதும், அதற்கு இடமளிக்கும் வகையில் எங்களது செயல்பாடுகளை மறு மதிப்பீடு செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,' என பதில் அளித்துள்ளது. இதனால், ரயில் பயணியர் அதிருப்தி அடைந்தனர்.
ரயில் பயணியர் கூறுகையில், 'பாலக்காடு கோட்டத்தில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனின் முக்கியத்துவத்தை குறைக்கும் செயலாக, முன்பதிவு மையத்தை மூடியதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு உரிமையும் பறித்து அதற்குரிய விளக்கத்தை மட்டுமே கொடுக்கிறது. எனவே, இனி காலம் தாழ்த்தாமல் உடனடியாக பொள்ளாச்சியை, சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்,' என்றனர்.

