/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுவதாக இல்லை 'ஜாக்டோ - ஜியோ' இனி வட்டார அளவில் தீவிர பிரசாரம்
/
விடுவதாக இல்லை 'ஜாக்டோ - ஜியோ' இனி வட்டார அளவில் தீவிர பிரசாரம்
விடுவதாக இல்லை 'ஜாக்டோ - ஜியோ' இனி வட்டார அளவில் தீவிர பிரசாரம்
விடுவதாக இல்லை 'ஜாக்டோ - ஜியோ' இனி வட்டார அளவில் தீவிர பிரசாரம்
ADDED : மார் 19, 2025 09:20 PM
கோவை; வட்டார அளவில் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள, 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பு வரும், 23ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
'ஜாக்டோ-ஜியோ' அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கைகளுக்கு, அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்து போனது.
அரசு செவி சாய்க்காத நிலையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்த, கோவை மாவட்ட நிர்வாகிகளின் ஆயத்தக் கூட்டம், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில், ஆசிரியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், அரசு, சாலமன்ராஜ், மாவட்ட நிதிக் காப்பாளர் அருளானந்தம் ஆகியோர், ஆலோசனை நடத்தினர்.
அப்போது, வரும் 23ம் தேதி காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை சிவானந்தா காலனி அருகே, டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும், 1,000 நோட்டீஸ்கள் வாயிலாக, ஆசிரியர்கள், அரசு ஊழியர் பொறுப்பாளர்கள் பரப்புரை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இதில், 100 சதவீத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளவும், அனைத்து துறை வாரியான அலுவலகங்களிலும், தீவிர பரப்புரை மேற்கொள்ளவும், வரும் நாட்களில் வட்டார அளவில் பிரசாரத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அரசு நடத்தை விதிகளில் மாற்றம் செய்வதற்கும், கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.