/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக சாதனை படைத்த 'நொய்யல்' மாணவர்கள்
/
உலக சாதனை படைத்த 'நொய்யல்' மாணவர்கள்
ADDED : நவ 18, 2025 04:40 AM

கோவை: நொய்யல் பப்ளிக் பள்ளியில், மாணவர்கள் மேஜிக் ஸ்கொயர் பசில் தீர்க்கும் உலக சாதனை முயற்சியை படைத்தனர்.
அதிகபட்ச பங்கேற்பாளர்கள் ஒரே நேரத்தில், 49*49 மேஜிக் ஸ்கொயர் பசில் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு மேலாளர் அபினயா, மாணவர்களின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்தார்.
பள்ளி முதல்வர் சரவணக்குமார் பேசுகையில், ''இந்த உலக சாதனை முன்னெடுப்பில் மாணவர்கள் நினைவாற்றல், படைப்பாற்றல், பிரச்னை தீர்க்கும் திறன், கணிதத்திறன் மட்டுமன்றி, அவர்களின் கவனம், ஒழுக்கம் மற்றும் முயற்சி மனப்பாங்கையும் வெளிப்படுத்தியுள்ளனர்,'' என்றார்.
பள்ளி தலைவர் புகழேந்தி, தாளாளர் வேலுசாமி, நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன், செயலாளர் ரவிசங்கர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

