/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் பள்ளியின் சார்பில் என்.எஸ்.எஸ்.முகாம்
/
அவினாசிலிங்கம் பள்ளியின் சார்பில் என்.எஸ்.எஸ்.முகாம்
அவினாசிலிங்கம் பள்ளியின் சார்பில் என்.எஸ்.எஸ்.முகாம்
அவினாசிலிங்கம் பள்ளியின் சார்பில் என்.எஸ்.எஸ்.முகாம்
ADDED : செப் 30, 2025 11:04 PM
கோவை; டி.ஏ.இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் செப். 26ல் துவங்கியது; நாளை வரை நடைபெறுகிறது. இம்முகாமில், அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முகாமிட்டு, பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று, திட்ட அலுவலர் மோகனாம்பாள் தலைமையில், மாணவியர் மருதமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டதோடு, மலைப்பாதைகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, நேரில் பார்வையிட்டார்.
இம்முகாமை ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராதாமணி, அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நளினி மற்றும் சிறப்பு விருந்தினரான கல்வியாளர் அருளானந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.