/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
15 பவுன் நகைகள் திருட்டு; நர்ஸ் சிறையில் அடைப்பு
/
15 பவுன் நகைகள் திருட்டு; நர்ஸ் சிறையில் அடைப்பு
ADDED : மே 20, 2025 12:08 AM
கோவை; வீட்டின் பீரோவில் இருந்து, 15 பவுன் நகைகளை திருடிய நர்ஸை, போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை வடவள்ளி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பத்ரிநாத் ரங்காச்சாரி, 41. தனியார் ஐ.டி., ஊழியர். இவர் தனது 75 வயது தாயை கவனித்துக் கொள்வதற்காக, சிவகங்கை மாவட்டம் கெம்பனுார், கண்ணன்குடியை சேர்ந்த மைக்கெல் ரூபி, 21 என்ற நர்ஸை பணியமர்த்தினார். கடந்த இரு வாரங்களாக மைக்கேல் ரூபி, மூதாட்டியை கவனித்து வந்தார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், மைக்கேல் ரூபி, பணியை விட்டு நின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள பீரோவை சோதித்த போது அதில் இருந்த, 15 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. பத்ரிநாத் ரங்காச்சாரி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த வடவள்ளி போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மைக்கேல் ரூபி நகைகளை திருடியது தெரிந்தது. அவரை பிடித்த போலீசார் சிறையில் அடைத்தனர்.