ADDED : செப் 25, 2026 07:31 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில், வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் சார்பில் ‘வேளாண் காடுகளுக்கான நவீன நாற்றங்கால் தொழில்நுட்ப’ பயிற்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் பாலசுப்ரமணியன் பேசுகையில், தரமான நடவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேளாண் காடுகள் வளர்ச்சியின் அடிப்படைத் தேவை. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அறிவியல் முறையில், நாற்றங்கால்களை அமைத்து நிர்வகிப்பதன் வாயிலாக விவசாயிகளுக்கும், தொழில்முனைவோருக்கும் சிறந்த வருமான வாய்ப்புகளை உருவாக்க முடியும், என்றார்.
மேலும், மரக்கன்றுகளின் தரம், சரியான இனத் தேர்வு, குளோனல் இனப்பெருக்கம், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
விவசாயிகள், வன அலுவலர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.----
