/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில மாநாட்டில் பங்கேற்க சத்துணவு ஊழியர்கள் முடிவு
/
மாநில மாநாட்டில் பங்கேற்க சத்துணவு ஊழியர்கள் முடிவு
மாநில மாநாட்டில் பங்கேற்க சத்துணவு ஊழியர்கள் முடிவு
மாநில மாநாட்டில் பங்கேற்க சத்துணவு ஊழியர்கள் முடிவு
ADDED : மே 19, 2025 11:14 PM
அன்னுார்; 'மாநில மாநாட்டில் அன்னுார் வட்டாரத்திலிருந்து அதிக அளவில் பங்கேற்பது,' என கொடியேற்று விழாவில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஸ்தாபன நாள் விழா அன்னுாரில் நடந்தது. இதில் சங்க கொடி ஏற்றப்பட்டது. சங்கத்தின் ஒன்றிய தலைவர் திலகம் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில் தமிழகத்தில் காலியாக உள்ள பல ஆயிரம் சத்துணவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்.
குறைந்தபட்ச பென்ஷன் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு காலத் தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24, 25, ஆகிய இரண்டு நாட்கள் திண்டுக்கல்லில் 16-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது.
இதில், அன்னுார் ஒன்றியத்திலிருந்து இரண்டு பஸ்களில் 110 பேர் மாநில மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் மற்றும் அரசுக்கு விடுக்கும் கோரிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.