/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இம்மாத சம்பளம் கிடைக்கல; சத்துணவு ஊழியர்கள் புலம்பல்
/
இம்மாத சம்பளம் கிடைக்கல; சத்துணவு ஊழியர்கள் புலம்பல்
இம்மாத சம்பளம் கிடைக்கல; சத்துணவு ஊழியர்கள் புலம்பல்
இம்மாத சம்பளம் கிடைக்கல; சத்துணவு ஊழியர்கள் புலம்பல்
ADDED : செப் 16, 2025 09:49 PM
வால்பாறை; வால்பாறையில் சம்பளம் கிடைக்காமல் சத்துணவு ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகராட்சியில், மொத்தம், 89 சத்துணவு மையங்கள் உள்ளன. சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் உட்பட 170 பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
சத்துணவு ஊழியர்கள் கூறுகையில், 'கடந்த சில மாதங்களாகவே, வால்பாறை நகராட்சியில் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. மேலும் பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன் உள்ளிட்ட எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. சம்பளத்திற்காக மாதம் தோறும் தவம் கிடக்க வேண்டிய நிலை உள்ளது,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பா றை நகராட்சி கமிஷனர் மாற்றப்பட்ட நிலையில், புதிய கமிஷனர்(பொ) பொறுப்பேற்றுள்ளார். சத்துணவு பணியாளர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கான பாஸ்வேர்டு நெட்ஒர்க் பிரச்சனையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உரிய பாஸ்வேர்டு வந்ததும் சம்பளம் வழங்கப்படும்,' என்றனர்.