ADDED : ஆக 25, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத்தினர் கூறுகையில், ‘காலை உணவு திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது. பணியாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்தால், நிலவும் காலிப்பணியிடங்களை கணிசமாக குறைக்க வாய்ப்பு ஏற்படும். தற்போது, ஒரு சத்துணவு அமைப்பாளர் அதிகமான மையங்களை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரிப்பதுடன், உடல் உழைப்பும் அதிகரித்து உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
