/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் வழங்க வேண்டும், சமூக நலத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டதற்கிணங்க, மருத்துவ காப்பீடு மற்றும் ஈமச்சடங்கு தொகை ரூ.25,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் வீரபத்திரம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திரளான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.