sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை மாமணியே முருகய்யா... கோவையின் நலம் காக்க வேணுமய்யா!

/

மருதமலை மாமணியே முருகய்யா... கோவையின் நலம் காக்க வேணுமய்யா!

மருதமலை மாமணியே முருகய்யா... கோவையின் நலம் காக்க வேணுமய்யா!

மருதமலை மாமணியே முருகய்யா... கோவையின் நலம் காக்க வேணுமய்யா!


ADDED : ஏப் 03, 2025 05:23 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப, கோவையின் வடமேற்கு திசையில், 15 கி.மீ., தொலைவில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கடல் மட்டத்தில் இருந்து, 741 மீட்டர் உயரத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், மருதமலை சுப்ரமணிய சுவாமி.

கொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்தை பற்றி, பட்டிபுரி என்ற பேரூர் புராணத்தில், மருதவரை படலத்தில் கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். கொங்கு சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது இக்கோவில். விஜயநகர பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால், திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மருதமலையை 'மருந்து மலை' என கூறுவதுண்டு. அந்தளவுக்கு பக்தர்களின் உடற்பிணியும், மனப்பிணியும் நீங்கும் வகையில், மூலிகை மரங்கள் நிறைந்திருக்கின்றன. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு படிக்கட்டு வழியாக வரும் பக்தர்கள், இளைப்பாறுவதற்கு ஆங்காங்கே மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

lமலையடிவாரத்தில் படிக்கட்டுப் பாதையின் துவக்கத்தில், தான்தோன்றி விநாயகர் கோவில் உள்ளது. இவரை வணங்கிச் சென்றதும், பதினெட்டாம் படி இருக்கிறது. சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட இயலாதவர்கள், பதினெட்டாம்படிக்கு வந்து வழிபடுவது வழக்கம்.

l இடும்பனை வணங்கிச் சென்றால், குதிரைக்குளம்பு சுவடு இருக்கிறது. அதற்கென மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. சூரர்களை வெற்றி கொள்ள புறப்படும்போதோ அல்லது திரும்பி வரும்போதோ குதிரைக் குளம்புகள் பதிந்த இடமென கருதப்படுகிறது. உண்டியல் பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றபோது, முருகப்பெருமான் அவர்களை தேடிச் சென்ற சமயத்தில் ஏற்பட்ட குதிரையின் குளம்படியாகவும் இருக்கலாம் என பக்தர்கள் கருதுகின்றனர்.

l படியேறி மலையை அடைந்தால் நேரே சன்னதி உள்ளது. லிங்க வடிவில் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் மூவரும் காட்சி தருகின்றனர். முதலில், ஆதி மூலஸ்தானமாகிய வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு பூஜை துவங்கும்.

l திருக்கோவில் தென்புறத்தில் படிக்கட்டுகள் வழியாக, கீழிறங்கி, கிழக்கு திசை நோக்கி சென்றால், பாம்பாட்டி சித்தர் சன்னதி அமைந்துள்ளது. அங்குள்ள பாறை, பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. பாம்பாட்டி சித்தர் கோவிலுக்கும், ஆதி மூலஸ்தானத்துக்கும் இடையே சுரங்க வழி உண்டு. அதன் வழியாக, ஆதி மூலஸ்தானத்தில் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகனை சித்தர் வழிபட்டார் என்பார்கள். இவர் வாழ்ந்த குகையில், ஒரு பாம்பு, பாலும் பழமும் உண்டு செல்வதை பார்க்கலாம். தற்போதும் பக்தர்கள் பாம்புக்கு பாலும் பழமும் அளிக்கின்றனர். இங்கு தியானம் செய்வது மன அமைதி தரும்.

l பிரதான சன்னதிக்கு வலதுபுறம் உள்பிரகாரத்தில் பட்டீஸ்வரர் சன்னதி, இடதுபுறம் மரகதாம்பிகை சன்னதி அமைந்துள்ளது. உமை மற்றும் மகேஸ்வரர் சன்னதிகளுக்கு இடையே முருகன் சன்னதி உள்ளது. சோமாஸ்கந்த மூர்த்தம் என்கிற சிறப்பினை இவ்வமைப்பு பெற்றிருக்கிறது.

l ஏழு நிலை ராஜகோபுர நுழைவாயிலை கடந்தால், கல்லால் ஆன தீப ஸ்தம்பத்துக்கு முன், வலம்புரி விநாயகர், உலோகத்திலான கொடி மரம், மயில் வாகனம் அமைந்துள்ளது. கருவறையின் நுழைவாயிலின் வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறம் வீரபாகுத்தேவர் மற்றும் ஆத்மலிங்கம், மார்கண்டேய லிங்கம் என்கிற சிவலிங்கங்கள், கருவறையில் தண்டாயுதத்துடன் காட்சி தரும் மூலவர் சுப்ரமணிய சுவாமி என, கோவில் அமைந்திருக்கிறது.

l ஐந்து மரங்கள் ஒன்றாக பின்னி பிணைந்து வளர்ந்துள்ள பழமையான மரம், மகா மண்டபத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது; மரத்தடியில் பஞ்சமுக விநாயகர் எழுந்தருளியுள்ளார். தல விருட்சமாக மருத மரம் உள்ளது.

ஒரு முறை மருதமலைக்கு நீங்கள் வந்து பாருங்கள்; ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்கள். தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும்.

நாளை கும்பாபிேஷகம்

கோவில் நடை அதிகாலை, 5:30 மணிக்கு திறக்கப்படும். காலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இச்சிறப்புமிக்க மருதமலை கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்து வருகிறது. நாளை (ஏப்., 4) காலை, 8:30 முதல், 9:30 மணிக்கு கும்பாபிஷேக நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி, இரண்டு லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்ப்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



கல்லாக மாறிய திருடர்கள்!

பதினெட்டாம்படியை கடந்து சென்றால், மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதை காணலாம். இம்மூன்று கற்களும் சிலையாய் மாறிய திருடர்கள் என்பர். கோவில் திருப்பணி நடந்த சமயத்தில் பொன், பொருள்களை முருகனடியார்கள் உண்டியலில் இட்டனர். அதை பார்த்த மூன்று திருடர்கள், உண்டியலை உடைத்து, பொருட்களை திருடிக் கொண்டு மலைச்சரிவு வழியாகச் சென்றிருக்கின்றனர். குதிரை வீரனை போல் முருகன் சென்று, அவர்களை பிடித்து, 'நீவிர் கற்சிலைகளாக கடவீர்' என சபித்ததால், அம்மூன்று திருடர்களும் கற்சிலைகளாக நிற்பதாக, செவி வழிச் செய்தியாக பேசப்படுகிறது.








      Dinamalar
      Follow us