தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 27ல் ஆய்வு செய்கிறார் ‘அப்சர்வர்’

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 27ல் ஆய்வு செய்கிறார் ‘அப்சர்வர்’

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 27ல் ஆய்வு செய்கிறார் ‘அப்சர்வர்’


UPDATED : நவ 24, 2026 05:00 PM

ADDED : நவ 24, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 05:00 PM ADDED : நவ 24, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கிறது. 21, 22ல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கு படிவங்கள் பெறப்பட்டன. 2 நாட்கள் நடந்த இம்முகாம்களில் 13,600 படிவங்கள் வந்தன. அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சரிபார்த்து, பட்டியலில் திருத்தம் செய்யப்படும்.

தொகுதி வாரியாக எத்தனை மனுக்கள் பெறப்பட்டன என்கிற விபரத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை வழங்கப்பட்டது. அடுத்த கட்ட முகாம் 29ல் நடைபெற இருக்கிறது.

தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லுாரிகளில் 765 மாணவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன. மாணவ, மாணவியரிடம் கட்டுரை, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. தொகுதி வாரியாக தேர்வானவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி, நிர்மலா கல்லுாரியில் இன்று (25ம் தேதி) நடக்கிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, வாக்காளர் பட்டியல் அப்சர்வரான, நிதித்துறை சிறப்பு செயலர் லலிதா, 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வு செய்கிறார்.

முன்னதாக, ஓட்டுச்சாவடிகள் பிரித்தது, சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார். புதிய வாக்காளராக சேர்க்கவும், திருத்தம் செய்யவும் பெறப்பட்ட படிவங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு தோராயமாக ஏதேனும் சில இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவும், ஓட்டுச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்லவும் தேர்தல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us