/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிேஷகம்
/
கோவில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிேஷகம்
ADDED : நவ 05, 2025 09:59 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஐப்பசி மாத பவுர்ணமியன்று, அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிேஷகம் நடத்தப்படுகிறது. இந்நாளையொட்டி, கோவில்களில், சிவலிங்கத்தை முழுமையாக அன்னத்தினால் அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர்.
பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஒரு லட்சத்து, 50ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களால், 13 அடி உயர சிவலிங்கமும், எட்டு அடி உயர பார்வதி தேவி சமேதர தரிசன நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி, பஞ்சமுக சதாசிவ ஐஸ்வர்ய ேஹாமம், திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், அன்னாபிேஷகம், தீபாராதனையும், இரவு, 7:00 மணிக்கு சிவதாண்டவ பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.
* சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில், காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை சுவாமி அன்னாபிேஷக அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதன்பின், அன்னாபிேஷக அலங்காரம் கலைக்கப்பட்டு, மதியம், 12:00 மணிக்கு மஹா அபிேஷகமும் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு அலங்கார பூஜை, தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.
*ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில், மஹா அபிேஷகம், அன்னாபிேஷகம், ஆராதனை நடைபெற்றது.
*தேவம்பாடிவலசு கங்கா, பார்வதி உடனமர் அம்மணீஸ்வரர் கோவிலில், காலை, 7:00 மணி முதல் 10:00 மணி வரை ருத்ர ேஹாமம், காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், மதியம், 2:00 மணி முதல், 4:00 மணி வரை அம்மணீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடைபெற்றன.மாலையில், அன்னாபிேஷக அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உடுமலை உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் நடந்த, அன்னாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சோமவாரப்பட்டி அமரபுயங்கரீஸ்வரர் கோவில்,ருத்ரப்பநகர் சித்தி விநாயகர் கோவிலில் பஞ்சமுகலிங்கேஸ்வரர், சிவசக்தி காலனி சக்தி விநாயகர் கோவிலில் காசிவிஸ்வநாதர், குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவிலில் சிவலிங்கேஷ்வரர் அன்னாபிேஷக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, மாலை, 6:00 மணிக்கு, அன்னம், காய்கறி, பழங்களை கொண்டு அன்னாபிேஷக விழா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
*வால்பாறை சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன் கோவிலிலும் மஹா அன்னாபிேஷக விழா நேற்று மாலை நடந்தது.

