UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 08:26 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமை அலுவலகம் வேலாண்டிபாளையம், ராமசாமி லேஅவுட்டில் நேற்று திறக்கப்பட்டது.
காலை 6 மணிக்கு சிவாச்சாரியர்களும் பட்டாச்சார்யர்களும் முக்கிய ஹோமங்களை நடத்தினர். கொங்கு மண்டல ஸ்ரீஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசி வழங்கினர்.
வி.எச்.பி. மாநில செயலாளர் கணேசன், மாநில துணை தலைவர்கள் லட்சுமி நாராயணன், ராமமூர்த்தி, பரமசிவன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜாஜி, விஷ்வ ஹிந்து பரிஷத்தர்ம யாத்திரா தென் தமிழக அமைப்பாளர் சிவலிங்கம், பசு பாதுகாப்பு அமைப்பாளர் அமர்நாத் சிவலிங்கம் உள்ளிட்ட, 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
