/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை குறையாது திட்டமிட்டபடி அமைக்க அதிகாரிகள் முடிவு
/
ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை குறையாது திட்டமிட்டபடி அமைக்க அதிகாரிகள் முடிவு
ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை குறையாது திட்டமிட்டபடி அமைக்க அதிகாரிகள் முடிவு
ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை குறையாது திட்டமிட்டபடி அமைக்க அதிகாரிகள் முடிவு
ADDED : டிச 14, 2025 07:49 AM
கோவை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை ஒட்டி, ஓட்டு சாவடிகளை சீரமைக்க இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஒரு ஓட்டு சாவடியில் அதிக பட்சம் 1,200 வாக்காளர்கள் மட் டுமே இருக்க வேண்டும்.
கூடுதல் வாக்காளர்கள் இருந்தால், அப்பகுதியில் கூடுதல் ஓட்டு சாவடி அமைக்க வேண்டும். ஓட்டு சாவடி வளாகத்தில் கூடுதல் அறைகள் அமைத்து, புதிய ஓட்டு சாவடியை உருவாக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, மாவட்ட அளவில் ஓட்டு சாவடிகளை சீரமைக்கும் பணி நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் 3,117 ஓட்டு சாவடிகள் உள்ளன. கடந்த தேர்தலின் போது புதிய வாக்காளர்கள் எண் ணிக்கை அதிமாக இருந்த போது, கூடுதலாக,102 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டன.
மாவட்ட அளவில் நடந்த ஆய்வில், கூடுதலாக, 451 ஓட்டு சாவடிகளை அமைக்க ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது. இந்நிலையில், வாக்காளர் சிறப்பு கணக்கெடுப்பு, பணி நடத்தப்பட்டது.
இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்து காணப்படுகிறது.
வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யக்கூடாது என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

