தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும்

 பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும்

 பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும்


ADDED : ஜூன் 11, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: புதிய பஸ் பாஸ்களை அரசு போக்குவரத்து கழகம் வழங்கும் வரை ஏற்கனவே வழங்கிய பழைய பஸ் பாஸை பயன்படுத்தி, பள்ளி மாணவர்கள் பயணிக்கலாம் என்று, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 30 கி.மீ., தொலைவு வரை, இலவசமாக அரசு பஸ்சில் பயணிக்கலாம். அதற்கு அரசு போக்குவரத்துக்கழகம் ஆண்டுதோறும் பாஸ் வழங்கும்.

புதிய கல்வியாண்டில் பஸ் பாஸ் வழங்குவதற்காக மாணவர் பட்டியலை அரசு போக்குவரத்துக்கழகம் பெற்றது.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 74,000 மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் சீருடையில் அரசு பஸ்களில் பயணிக்கலாம். பழைய பஸ் பாஸ் போதும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us