/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவனிடம் 'அத்துமீறல்' :முதியவருக்கு '20 ஆண்டு'
/
சிறுவனிடம் 'அத்துமீறல்' :முதியவருக்கு '20 ஆண்டு'
ADDED : நவ 04, 2025 12:45 AM
திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி, சீதா நகரைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 61. ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். கடந்த, 2022 மே மாதம், 10 வயது சிறுவன் ஒருவனை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுவன் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.இது குறித்த வழக்கு திருப்பூர் விரைவு மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமிலாபானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, சிறுவனிடம் அத்துமீறிய அருள்தாசுக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் அருள்தாஸ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

