/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுரோட்டில் தீப்பற்றிய ஆம்னி வேன்
/
நடுரோட்டில் தீப்பற்றிய ஆம்னி வேன்
ADDED : மார் 29, 2025 11:34 PM

கோவை: சித்தாப்புதுார் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன், தீப்பற்றி எரிந்தது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 25 (ஓட்டுநர் உரிமம் இல்லை); செல்வராஜ் என்பவரின் சிகிச்சைக்காக, நேற்று கோவை வந்தார். அவருடன் மேலும் இருவர் வந்தனர்.
சிகிச்சை முடிந்த பிறகு நான்கு பேரும், நேற்று மதியம் 1:00 மணியளவில் அவிநாசிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
சித்தாபுதுார் அருகே இந்த எல்.ஜி.பி.,வாகனம் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தை சந்தோஷ் பெட்ரோலுக்கு மாற்றினார். அப்போது, வேனில் இருந்து புகை வந்ததால், நான்கு பேரும் வெளியில் இறங்கினர்.
இறங்கிய சிறிது நேரத்தில், வேன் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். எனினும், ஆம்னி வேன் தீயில் கருகி நாசமானது.