/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமச்சந்திரா பள்ளி செல்லும் வழியில் குப்பைக்கழிவு காலையும் மாலையும் கடும் நெரிசலால் மக்கள் அவதி
/
ராமச்சந்திரா பள்ளி செல்லும் வழியில் குப்பைக்கழிவு காலையும் மாலையும் கடும் நெரிசலால் மக்கள் அவதி
ராமச்சந்திரா பள்ளி செல்லும் வழியில் குப்பைக்கழிவு காலையும் மாலையும் கடும் நெரிசலால் மக்கள் அவதி
ராமச்சந்திரா பள்ளி செல்லும் வழியில் குப்பைக்கழிவு காலையும் மாலையும் கடும் நெரிசலால் மக்கள் அவதி
ADDED : செப் 30, 2024 04:23 AM

வீணாகும் குடிநீர்
அவிநாசி சாலையில்மேம்பால துாண் அமைக்க, குழி தோண்டுகையில் இரு இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து, மூன்று நாட்களாக தண்ணீர் வீணாகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- யுவராஜ், திருமகள் நகர்.
எட்டு மாசம் ஆச்சு
கோவை போத்தனுார் ஜோதிநகர் இரண்டாவது வீதியில், உப்பு தண்ணீர் குழாய் பழுதாகி எட்டு மாதங்கள் கடந்தும் சரிசெய்யப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உமா, ஜோதிநகர்.
துர்நாற்றம் தாங்கலை
சாய்பாபா காலனி, ராமலிங்க நகர் 4வது வீதியில் கடந்த, 10 நாட்களாக சாக்கடை சுத்தம் செய்யாமல் விட்டுள்ளதால், துர்நாற்றம் அதிகரித்து நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு ஒரு முறை, சரியாக சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், சாய்பாபா காலனி.
ரெடிமேட் பேருந்து நிறுத்தத்தின் அவலம்
கோவை 60வது வார்டு தேவேந்திர வீதியில், 2021ம் ஆண்டு அமைக்கப்பட்ட ரெடிமேட் பேருந்து நிறுத்தம், அருகில் உள்ள சாக்கடை கால்வாய் ஓரம் ஏற்பட்டுள்ள மண் சரிவால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும், கால்வாயினுள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை அவசியம்.
- தேவி, உப்பிலிபாளையம்
சாலை ஆக்கிரமிப்பு
சாய்பாபா காலனி, வார்டு எண் 45ல் கிருஷ்ணா நகர் சாலையில் வாகனங்கள் நிறுத்தி ஆட்கள் செல்ல முடியாத அளவு, குப்பை சாலையில் பல நாட்களாக தேங்கி இருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
- சந்தோஷ், சாய்பாபா காலனி.
மேடு பள்ளமான சாலை
கோவை மாநகராட்சியில், 7, 8வது வார்டுகளில் சாலை சேதமடைந்து மேடு பள்ளமாக உள்ளது. குறிப்பாக, 8 வார்டு நேருநகர் பகுதி சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-நடராஜன், நேருநகர்.
தினந்தோறும் அவசியம்
பாப்பாநாயக்கன்புதுார் முல்லைநகர், ஸ்ரீநகர் பகுதியில் வீடுதோறும் குப்பை சேகரிக்கும் பணி, கடந்த சில மாதங்களில்வாரத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தினந்தோறும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கல்யாணி, முல்லைநகர்.
தெரு விளக்கு எரிவதில்லை
கோவை வடவள்ளி சிறுவாணி ரோடு வார்டு எண் 39ல் பொருத்தப்பட்ட தெரு விளக்கு, இதுவரை பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன் பொருத்தப்பட்ட விளக்கு இன்னும் எரிவதில்லை.
-தினேஷ் குமார்,கீர்த்தி நகர்.
கட்டட கழிவால் சிக்கல்
குனியமுத்துார்- இடையர்பாளையம் சரஸ்வதி ராமச்சந்திரா பள்ளி செல்லும் வழியில், கட்டட கழிவு கொட்டப்பட்டு இருப்பதால், காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை, விரைந்து அகற்ற வேண்டும்.
- ராஜன், குனியமுத்துார்.
நாய்கள் தொல்லை
பாலாஜி நகர் மற்றும் சுகுணா பிப்ஸ் பள்ளி அருகில், நேரு நகர் மேற்கில் பல தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. நடந்து வருபவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
- வித்யா, நேரு நகர்.
நிழற்கூரை இல்லை
பாலக்காடு மெயின் ரோடு, குவாரி ஆபீஸ்பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்கூரை, விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டது. மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- சங்கரி, பாலக்காடு சாலை.