ADDED : ஆக 24, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
கோவை: நேரு கல்வி குழுமம் சார்பில், கேரளத்தின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையில், அதன் 16 நிறுவனங்களிலும் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாணவர்கள், பேராசிரியர் என, 10,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உற்சாகமூட்டும் சிங்காரி மேளத்தின் தாள இசையுடன் மாவேலி மன்னரின் வருகை இருந்தது. மாணவர்களின் கலைத்திறனையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் வண்ணமயமான பூக்களம் ஈர்ப்பாக அமைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற புலிக்களி, மோகினியாட்டம், கதகளி மற்றும் திருவாதிரை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. நிறைவில், பாரம்பரிய ஓணம் விருந்தில் வாழை இலையில் பல்வேறு சைவ உணவு வகைகளை அனைவரும் சுவைத்தனர்.
