ADDED : ஆக 21, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு, அத்தப்பூ (பூக்கோலம்) கோலமிட்டு ரயில்வே அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரயில்வே ஸ்டேஷன் பொறுப்பாளர் சதீஷ், ஸ்டேஷன் மாஸ்டர் மகேஷ், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., சுமோத் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். அதில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பாட்டுப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
