/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிரி ஊக்கிகளின் தாக்கம் ஒருநாள் விவசாய பயிற்சி
/
உயிரி ஊக்கிகளின் தாக்கம் ஒருநாள் விவசாய பயிற்சி
ADDED : நவ 25, 2025 05:51 AM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில், உயிரி ஊக்கிகளின் தாக்கம் குறித்த ஒரு நாள் விவசாயப் பயிற்சி நடந்தது.
உழவியல் துறை பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். பதிவாளர் தமிழ்வேந்தன் துவக்கி வைத்தார். பயிர் மேலாண்மை இயக்குனரக இயக்குனர் கலாராணி பேசினார். வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில், உயிரி ஊக்கிகளின் பயன்பாடு மற்றும் அவற்றின் முக்கியத்துவம், அங்கக வேளாண்மை முறைகள் மற்றும் அதன் நிகழ்கால தேவைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
துரித முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். உழவியல் துறை பேராசிரியர் திருக்குமரன் நன்றிகூறினார்.

