/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிராவல்ஸ் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு
/
டிராவல்ஸ் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு
ADDED : செப் 14, 2025 11:29 PM
போத்தனூர்; கோவைபுதூர் செல்லும் வழியில் தொட்டராயன் கோவில் வீதியில், கேரள மாநிலம், ஒத்தப்பாலத்தை சேர்ந்த மஜீத், 50 என்பவர் டிராவல்ஸ் அலுவலகம் நடத்தி வருகிறார்.
இங்கு மூன்று பெண்கள் தங்கி, வேலை பார்த்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன், மஜீத் வெளியே சென்றிருந்தார். ஒரு பெண்ணின் சகோதரரான முபின் என்பவர் அங்கு வந்து சென்றுள்ளார்.
தொடர்ந்து மஜீத் வந்தபோது, ஒரு லட்சம் ரொக்கம், அவரது மொபைல்போன் திருட்டு போயிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அப்பெண்ணிடம் கேட்டார்.
அப்பெண் சகோதரர் முபினுக்கு தகவல் கூற, அவர் மேலும் சிலருடன் அங்கு வந்தார். மஜீத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி மிரட்டிச் சென்றனர்.
மஜீத் புகாரில், குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, முஹமது ஷாலிக், முஹமது ஷெரீப், ரஸாக், தவுபிக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.