sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் பத்து மாதங்களில் ஒரு லட்சம் வாகனங்கள் பதிவு! போக்குவரத்து பாதிப்பு... சூழலுக்கு வருகிறது ஆபத்து

/

கோவையில் பத்து மாதங்களில் ஒரு லட்சம் வாகனங்கள் பதிவு! போக்குவரத்து பாதிப்பு... சூழலுக்கு வருகிறது ஆபத்து

கோவையில் பத்து மாதங்களில் ஒரு லட்சம் வாகனங்கள் பதிவு! போக்குவரத்து பாதிப்பு... சூழலுக்கு வருகிறது ஆபத்து

கோவையில் பத்து மாதங்களில் ஒரு லட்சம் வாகனங்கள் பதிவு! போக்குவரத்து பாதிப்பு... சூழலுக்கு வருகிறது ஆபத்து

2


ADDED : டிச 03, 2024 11:41 PM

Google News

ADDED : டிச 03, 2024 11:41 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் கடந்த பத்து மாதங்களில், பதிவான வாகனங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை கடந்தது. இத்துடன், தற்போது கோவை மாவட்டத்தில் 33 லட்சத்து 99 ஆயிரத்து 292 வாகனங்கள் உள்ளன. ஆகவே,போக்குவரத்து உட்கட்டமைப்பை பெருக்க வேண்டும்; நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

கோவையில்எட்டு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன.நாளொன்றுக்கு (வார மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், புதியதாக பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு, 50 முதல் 75 வாகனங்களே பதிவாகும். ஆனால் தற்போது பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை, நுாறை கடந்து விட்டது. சுபமுகூர்த்தம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அதிக பட்சம், 175 வாகனங்கள் வரை பதிவாகின்றன.

காரணம் என்ன ?


மார்க்கெட்டில் புதிது, புதிதாக ஏராளமான வாகனங்கள் அறிமுகமாகின்றன. அதற்கு சலுகைகளும் தாராளமாக வழங்கப்படுகின்றன. வாகனங்களை இயக்குவதற்கு, பல சவுகரியங்களை ஒவ்வொரு நிறுவனங்களும், புதியதாக அறிமுகம் செய்கின்றன.

அதனால் இளைஞர்கள், இளம்பெண்களை போல வயதானவர்களும், கையாள எளிதாக உள்ள புதிய வாகனங்களையே, அதிகம் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் ஒரு வாகனத்தை அதிக பட்சம், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அல்லது 50,000 கி.மீ.,க்கு மேல் பயன்படுத்துவதில்லை.

எக்சேஞ்ச் திட்டத்தில் கொடுத்துவிட்டு, புதிய வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இதற்கேற்றபடி ஆங்கில மற்றும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாள், ஆடிதள்ளுபடி, தீபாவளி, ஆண்டு இறுதி ஆபர் வழங்கப்படுகிறது.

1,19,510 வாகனங்கள் பதிவு


கடந்த ஜன., முதல் அக்., வரையில் 1,19,510 வாகனங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகம். இதே போன்று, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கேற்ப போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை, கோவை மாநகர போலீசாரும், கோவை மாநகராட்சியும் இணைந்து, மேற்கொள்ள வேண்டும்.

இதன் வாயிலாக விபத்துக்களையும், உயிர்ப்பலிகளையும் தவிர்க்கவும், தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

பயன்படுத்த வேண்டும்'

கோவை சரக போக்குவரத்து துறை இணை கமிஷனர் (பொறுப்பு) அழகரசு கூறுகையில், ''பொது வாகன போக்குவரத்தை பயன்படுத்த, பொதுமக்கள் பழகிக்கொள்ள வேண்டும். இதனால் தனிநபர் வாகன பயன்பாடு குறையும். சுற்றுச்சூலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். விபத்துக்களும் அதனால் ஏற்படும் உயிர்பலிகளின் எண்ணிக்கையும் குறையும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us