தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொலை வழக்கில் ஒருவர் கைது

கொலை வழக்கில் ஒருவர் கைது

கொலை வழக்கில் ஒருவர் கைது


ADDED : செப் 09, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: பாப்பம்பட்டியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சூலூர் அடுத்த பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில், கடந்த 7ம் தேதி, கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது. அவர் யார் எனத் தெரியவில்லை.

சூலூர் போலீசார் விசாரணையில் கொலையுண்ட நபர், நேபாளத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் ஷா என்பதும், பாப்பம்பட்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் தெரியவந்தது.

அவருடன் அறையில் தங்கி இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மத்யாஸ் மால்டு, 26 என்பவரை போலீசார் விசாரித்தனர். இதில், அவர் ஜெகதீஷ் என்பவருடன் சேர்ந்து ராமேஸ்வர் ஷாவை கொலை செய்தது தெரிய வந்தது. மத்யாஸ் மால்டுவைக் கைது செய்த போலீசார் ஜெகதீஷை தேடி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், ‘மே.வங்கத்தை சேர்ந்த ஜெகதீஷ், ராமேஸ்வர் ஷா, மத்யாஸ் மால்டு ஆகிய மூவரும் ஒரே அறையில் தங்கி, தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்துள்ளனர். ஜெகதீஷை ராமேஸ்வர் ஷா அடிக்கடி உருவகேலி செய்து வந்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ஜெகதீஷ் மற்றும் மத்யாஸ் இருவரும் சேர்ந்து ராமேஸ்வர் ஷாவை கடந்த, 4 ம்தேதி இரவு, மது அருந்த நந்தினி நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, திட்டமிட்டபடி ராமேஸ்வர் ஷாவை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். மத்யாஸ் மட்டும் வேலைக்கு வந்துள்ளார். ஜெகதீஷ் தலைமறைவாகியுள்ளார்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us