/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்; வாய் பேசாதோர் மாநாட்டில் தீர்மானம்
/
ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்; வாய் பேசாதோர் மாநாட்டில் தீர்மானம்
ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்; வாய் பேசாதோர் மாநாட்டில் தீர்மானம்
ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்; வாய் பேசாதோர் மாநாட்டில் தீர்மானம்
ADDED : செப் 15, 2025 10:37 PM
கோவை; தமிழ்நாடு செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேசாத மாற்றுத் திறனாளிகள் மாவட்ட சிறப்பு மாநாடு, கோவை ஜீவா இல்லத்தில் நடந்தது.மாநாட்டுக்கு செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசு வேலைகளில் செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தில் வழங்குவது போல், 6000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கிட வேண்டும்.காவல்துறையில் புகார் அளிப்பதற்கு வசதியாக வாட்ஸாப் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை தாமதப்படுத்தாமல் வழங்கிட வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இ.கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, தமிழ்நாடு செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேசாதோர் அமைப்பின் மாநில செயலாளர் சொர்ணவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.