/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
/
மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
ADDED : மார் 23, 2025 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பாலக்காடு அருகே கோவிந்தாபுரத்தைச்சேர்ந்தவர் சுபாஷ், 36. இவர், மாருதி ஸ்விப்ட் காரில், மீன்கரை ரோட்டில், கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார், 34, என்பவர் காரை ஓட்டினார்.
அப்போது, குளத்துப்புதுார் பொள்ளாச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தின் மீது மோதி நின்றது. இதில், சுபாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.