/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பகவான் நாமத்தில் மூழ்கியே இருப்பவருக்கு துக்கம் கிடையாது'
/
'பகவான் நாமத்தில் மூழ்கியே இருப்பவருக்கு துக்கம் கிடையாது'
'பகவான் நாமத்தில் மூழ்கியே இருப்பவருக்கு துக்கம் கிடையாது'
'பகவான் நாமத்தில் மூழ்கியே இருப்பவருக்கு துக்கம் கிடையாது'
ADDED : பிப் 02, 2026 06:27 AM

கோவை: கடையநல்லுார் பக்த விருந்தம் குருகுலம் சார்பில் 'உயர்ந்த பக்தி எது' என்ற தலைப்பில் அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதை வழங்கும் நிகழ்ச்சி, ராம்நகரில் உள்ள சுபஸ்ரீ ஹாலில் நேற்று நடந்தது.
குருகுலத்தை நிறுவிய டாக்டர் ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹராஜ் ஆன்மிக உரையாற்றுகையில், ''பகவான் நாமத்தில் திடமாக இருக்க வேண்டும். தேவையற்ற குழப்பம் கூடாது. நாமமே ஒரு தத்துவம். இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து வழிபட வேண்டும்.
முருகன், சிவன், விநாயகர் என எந்த கடவுளின் பக்தியாக இருந்தாலும் ஆண்டு முழுவதும் உறுதியாக இருக்க வேண்டும். பகவான் நம்பிக்கையில் திடமாக இருந்தால் பகவான் நமக்கு பக்க பலமாக இருப்பார்; பக்தியை தருவார்.
பகவான் நாமத்தில் மூழ்குபவர்களுக்கு துக்கம் கிடையாது. 'ராமகிருஷ்ண கோவிந்தன்' நாமம் சுலபமாக இருக்கிறது. நாமம் சொல்லும்போது தொண்டை நெகிழ்கிறது என்றாலே போதுமானது,'' என்றார்.
முன்னதாக நடந்த, குருகுல மாணவர்களின் பஜனை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.