/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 மாதத்தில் ஆன்லைன் மோசடி ரூ.29.03 கோடி! போலீசார் மீட்டது ரூ.1.83 கோடி; முடங்கி கிடக்குது ரூ.14.43 கோடி
/
8 மாதத்தில் ஆன்லைன் மோசடி ரூ.29.03 கோடி! போலீசார் மீட்டது ரூ.1.83 கோடி; முடங்கி கிடக்குது ரூ.14.43 கோடி
8 மாதத்தில் ஆன்லைன் மோசடி ரூ.29.03 கோடி! போலீசார் மீட்டது ரூ.1.83 கோடி; முடங்கி கிடக்குது ரூ.14.43 கோடி
8 மாதத்தில் ஆன்லைன் மோசடி ரூ.29.03 கோடி! போலீசார் மீட்டது ரூ.1.83 கோடி; முடங்கி கிடக்குது ரூ.14.43 கோடி
ADDED : செப் 30, 2024 11:49 PM

கோவை: ஆன்லைன் வாயிலாக கடந்த, 8 மாதத்தில் ரூ.29.03 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.14.43 கோடி முடக்கப்பட்டுள்ளதாக, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். படித்தவர்களே அதிகம் ஏமாறுவதாக கூறி வருத்தப்படுகின்றனர் போலீசார்.
கோவை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் மோசடி குறைந்தபாடில்லை. விழிப்புணர்வு இல்லாததால், பொதுமக்கள் ஏமாந்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மோசடியில் ஈடுபடுபவர்கள், ஒவ்வொரு முறையும் விதவிதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டதால், அதில் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 'லோன் ஆப்' வாயிலாக பணத்தை இழந்து வந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
ஆனாலும், கொரியரில் போதை பொருள் வந்திருப்பதாக கூறி பணம் மோசடி, டிரேடிங், ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது.
கடந்த, ஜன., முதல் ஆக., மாதம் வரை, ரூ.29.03 கோடி ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. பெரும்பாலும் படித்தவர்கள்தான் பணத்தை இழந்துள்ளனர். ஆன்லைன் மோசடி குறித்து தெரிந்தவர்களும், பணத்தை இழப்பதுதான் அதிர்ச்சியான தகவல். இந்த ரூ.29.03 கோடி மோசடியில் ரூ.14.43 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.1.83 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு அளிக்கிறோம்
ஆன்லைன் மோசடியை தடுக்க, தொழில் நிறுவனங்கள், ஐ-.டி., நிறுவனங்கள், கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தற்போது 'வாட்ஸ் ஆப்' வாயிலாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு, சைபர் கிரைம் போலீசாரால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் மோசடியை தடுப்பதற்கான, விழிப்புணர்வு மெசேஜ் மற்றும் வீடியோவை அனுப்பி, விளக்கம் அளிக்கப்படுகிறது. அவர்கள் வாயிலாக ஊழியர்களுக்கு, வீடியோ மெசேஜ் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேட்டுக்கொண்டால் நேரில் சென்றும் விளக்கி வருகிறோம். பொதுமக்கள் மொபைல் போன்களில் வரும், ஏ.பி.கே., (ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பேக்கேஜ்) பதிவிறக்கம் செய்வதோ, லிங்கை திறந்து பார்ப்பதோ கூடாது. அதன் வாயிலாக, மொபைல் போனில் உள்ள தகவல்கள் திருட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் மொபைல் போன்களில் வரும், ஏ.பி.கே., (ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பேக்கேஜ்) பதிவிறக்கம் செய்வதோ, லிங்கை திறந்து பார்ப்பதோ கூடாது. அதன் வாயிலாக, மொபைல் போனில் உள்ள தகவல்கள் திருட வாய்ப்பு உள்ளது.