/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே ஒரு ரோடு; ஏகப்பட்ட கோளாறு! கவனம் செலுத்துமா நெடுஞ்சாலைத்துறை
/
ஒரே ஒரு ரோடு; ஏகப்பட்ட கோளாறு! கவனம் செலுத்துமா நெடுஞ்சாலைத்துறை
ஒரே ஒரு ரோடு; ஏகப்பட்ட கோளாறு! கவனம் செலுத்துமா நெடுஞ்சாலைத்துறை
ஒரே ஒரு ரோடு; ஏகப்பட்ட கோளாறு! கவனம் செலுத்துமா நெடுஞ்சாலைத்துறை
ADDED : நவ 06, 2025 11:10 PM

நெகமம்: பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, காட்டம்பட்டி பகுதியில் ரோட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள் நிலவுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகரிப்பால் ரோடு விரிவாக்கப்பணிகள் நடக்கிறது. இந்நிலையில், காட்டம்பட்டி பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஒரு சில பகுதியில் இடிக்கப்பட்ட வீட்டை ஒட்டியே ரோடு போடப்பட்டுள்ளது. இதனால் ரோடு வளைந்து நெளிந்து காணப்படுகிறது. ரோட்டில் வேகமாக வரும் வாகன ஓட்டுநர்கள், அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்புள்ளது.
இதேபோன்று, பழநி ஆண்டவர் கோவில் எதிரே ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான பொதுக்கிணறு உள்ளது. இதிலிருந்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இந்த கிணற்றை ஒட்டிய ரோடு உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இந்த ரோட்டில் வரும் வாகனங்கள் கொஞ்சம் கவனம் சிதறினாலும், கிணற்றுக்குள் விழும் அபாய நிலை உள்ளது. இதைத்தடுக்க, நெடுஞ்சாலை துறை சார்பில் அந்தக் கிணற்றுப்பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் இந்த தடுப்புகள் தெரிய வாய்ப்பில்லை.
இது மட்டுமின்றி, மின்கம்பங்கள் இந்த ரோட்டின் ஓரத்தில் நடப்படாமல் ரோட்டிலேயே நடப்பட்டுள்ளது. இதுவும், வாகன விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளால் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு உள்ளது. பைக் ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் பயணிக்கும் போது, கவனம் சிதறினால் விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது, என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் இந்த பிரச்னைகளில் கவனித்து செலுத்தி, தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.

