/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவின் எதிரே திறந்தவெளி 'பார்'
/
செம்மொழி பூங்காவின் எதிரே திறந்தவெளி 'பார்'
ADDED : பிப் 25, 2026 07:16 AM

காந்திபுரம்: செம்மொழி பூங்கா எதிரே, காந்திபுரம் மேம்பாலத்தின் கீழ், ஏராளமான பிளாஸ்டிக் குப்பையை சில'நல்ல உள்ளங்கள்' போட்டு, அந்த இடத்தை குப்பைமேடாக்கி வருகின்றனர்.
மாநகராட்சி தரப்பில் தூண்களில் ஓவியங்கள், பாலத்தின் அடியில் உள்ள காலி இடங்களில் செடிகள், புல்வெளிகளை வளர்த்து பராமரிக்க முயல்கின்றனர்.
நம்மவர்களோ 'அதெப்படி அந்த இடம் அவ்வளவு சுத்தமா இருக்கலாம்' என்பதைப் போல, காலியான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், உணவு பார்சல் கவர்களை, ஏராளம் போட்டு வைத்துள்ளனர்.
ஆரம்பகாலங்களில் வீடில்லாதவர்கள், யாசகம் எடுப்பவர்கள் பாலத்தின் அடியில் தங்கியிருந்தனர். தற்போது குடிகாரர்கள் இந்த இடத்தை அசுத்தப்படுத்தி வருகின்றனர்.
அந்த வழியாக வரும் போலீசார், இவர்களை சற்றுக் 'கவனித்தால்' நல்லது.

