/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடியை திறங்க! முகாமில் முறையீடு
/
அங்கன்வாடியை திறங்க! முகாமில் முறையீடு
ADDED : ஜூலை 27, 2025 01:11 AM
அன்னுார் : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட ஐந்தாவது கட்ட முகாம், அன்னுார் தாலுகா கணுவக்கரையில் நடந்தது; மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா துவக்கி வைத்தார்.
மகளிர் உரிமைத்தொகை கோரி 179, இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, வருவாய்த்துறையில் 236, தகவல் தொழில்நுட்பத் துறையில் 24, உள்பட 15 துறைகளில் 577 மனுக்கள் தரப்பட்டன.
பொதுமக்கள் கூறுகையில், 'கணுவக்கரை ஊராட்சியில் அங்கன்வாடி மையம் மூடப்பட்டுள்ளது. இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் தவிக்கின்றனர். அவற்றை திறந்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றனர்.
தாசில்தார் யமுனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி உட்பட, 15 துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.