/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொன்விழா கலையரங்க பெயரை மாற்ற எதிர்ப்பு; அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
/
பொன்விழா கலையரங்க பெயரை மாற்ற எதிர்ப்பு; அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
பொன்விழா கலையரங்க பெயரை மாற்ற எதிர்ப்பு; அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
பொன்விழா கலையரங்க பெயரை மாற்ற எதிர்ப்பு; அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
ADDED : செப் 15, 2025 10:36 PM

சூலுார்; சூலுார் பேரூராட்சியில் உள்ள பொன்விழா கலையரங்கத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, கவுன்சில் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
சூலுார் பேரூராட்சிக்குட்பட்ட சிறுவாணி டேங்க் வீதியில், பொன்விழா கலையரங்கம் உள்ளது. சூலுார் பேரூராட்சி நிர்வாகம் பொன்விழா கலையரங்கத்தின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், பேரூராட்சி கவுன்சில் கூட்டம், தலைவர் தேவி தலைமையில் நேற்று நடந்தது. பொன்விழா கலையரங்கத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் சுமதி வெளிநடப்பு செய்தார்.
அ.தி.மு.க., பா.ஜ., மனு கலையரங்கத்தின் பெயரை மாற்றக்கூடாது என, வலியுறுத்தி, அ.தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகை வேலன், பா.ஜ.,ஒன்றிய தலைவர் விக்னேஷ் மற்றும் தே.மு.தி.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
நகர செயலாளர் கார்த்திகை வேலன் கூறியதாவது:
சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் வகையில், பொன் விழா கலையரங்கம் கட்டப்பட்டது. அப்போது பேரூராட்சி தலைவராக இருந்தவர்தான் இப்பெயரை சூட்டினார். ஆனால், தற்போது, அந்த பெயரை மாற்ற,தீவிரம் காட்டி வருகின்றனர். சூலுாருக்கு பெருமை அளிக்கும் சின்னமாக இருக்கும் கலையரங்கத்தின் பெயரை மாற்றுவதை ஏற்க மாட்டோம். தொடர்ந்து போராடு வோம். இவ்வாறு, அவர் கூறினார்.