/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்துப்பாளையத்தில் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு
/
குளத்துப்பாளையத்தில் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு
ADDED : மே 19, 2025 11:54 PM

கோவை; கோவைப்புதுார் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில், சாலை விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியுள்ளதாவது: குளத்துப்பாளையம், 91வது வார்டு, விநாயகர் கோவில் வீதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது எங்கள் பகுதியில், 30 அடி சாலை உள்ளது. இதனை 60 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இங்குள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடையும்,அக்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே சாலை விரிவாக்கத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.