/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
/
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு
ADDED : ஜன 28, 2025 07:54 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, முள்ளுப்பாடி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக் கூடாது என, அப்பகுதி மக்கள், சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
முள்ளுப்பாடியில் இருந்து, நெகமம் செல்லும் சாலையில், காணியலாம்பாளையம் சந்திப்பு பகுதி உள்ளது. இவ்வழித்தடத்தை, அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே, தனியார் கட்டடத்தில், டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி, விவசாயம், தொழில்நிறுவனங்கள், கோவில் உள்ளிட்டவைகள் கொண்டுள்ளதால், டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக் கூடாது. டாஸ்மாக் மதுக்கடை அமைந்தால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால், மதுக்கடை அமைப்பதை கைவிட வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.