ADDED : ஜூன் 17, 2025 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்,; சூலுார் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மருதம் நகரில் ஜெபக்கூடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள், பா.ஜ., வினர் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த, 2010ம்ஆண்டு முதல் மருதம் நகரில் ஜெபக்கூடம் என்ற பெயரில் மதமாற்றம் நடந்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடந்துள்ளன.
தற்போது முறையான அனுமதி பெறாமல், ஜெபக்கூட கட்டடம் கட்டும் பணிகளை துவக்க முயற்சி நடக்கிறது. இதற்கு அனுமதி வழங்க கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அலுவலகத்தை முற்றுகையிடுவோம்' என்றனர்.