/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிசிதாரருக்கு இழப்பீடு தர உத்தரவு
/
பாலிசிதாரருக்கு இழப்பீடு தர உத்தரவு
ADDED : டிச 25, 2024 11:41 PM
கோவை; இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்ய மறுத்ததால், பாலிசிதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை, சவுரிபாளையம், மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்த தில்லை ராஜன், 'மேக்ஸ்லைப் இன்சூரன்ஸ்' நிறுவனத்தில் பாலிசிதாரராக சேர்ந்து, பிரீமியம் செலுத்தி வந்தார்.
பாலிசி பலன்களை அவருக்கு திருப்பி அளிக்கவில்லை. இதனால் பாலிசியை ரத்து செய்து, ஏற்கனவே செலுத்திய தொகையை, திருப்பி தரக்கோரி கடிதம் அனுப்பினார்.
ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், ஐந்தாண்டுகள் முடிந்த பிறகே, பாலிசியை ரத்து செய்து, பணத்தை திரும்ப பெற முடியும் என்று தெரிவித்தனர்.
இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.