/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புது காருக்கு கூடுதலாக பெற்ற தொகை திருப்பித் தர உத்தரவு
/
புது காருக்கு கூடுதலாக பெற்ற தொகை திருப்பித் தர உத்தரவு
புது காருக்கு கூடுதலாக பெற்ற தொகை திருப்பித் தர உத்தரவு
புது காருக்கு கூடுதலாக பெற்ற தொகை திருப்பித் தர உத்தரவு
ADDED : செப் 15, 2025 10:50 PM
கோவை; வேடப்பட்டியை சேர்ந்த கணேஷ் ரங்கநாதன் என்பவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள 'டேப் ஏசஸ்' நிறுவனத்தில், 2024ல் புதிதாக கார் வாங்கினார்.
விலை பட்டியலில் குறிப்பிட்டதை விட கூடுதலாக, 1.04 லட்சம் ரூபாய் வசூலித்தனர். கார் டெலிவரி செய்தபோது, கூடுதல் தொகையை வங்கி கணக்கில் திருப்பிச் செலுத்திச் விடுவதாக தெரிவித்துள்ளனர்.
கார் வாங்கி பல மாதங்களாகியும், கூடுதலாக பெற்ற தொகையை திருப்பித் தரவில்லை. இதனால், இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கணேஷ் ரங்கநாதன் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற தொகை, 1.04 லட்சம் ரூபாயை கார் விற்பனை நிறுவனம் திருப்பித் தருவதோடு, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.