/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் உறுப்புகள் தானம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு
/
உடல் உறுப்புகள் தானம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு
ADDED : மார் 23, 2025 11:08 PM

கோவை : ஈரோடு, புஞ்சை புளியம்பட்டி, நல்லுாரை சேர்ந்த கல்லுாரி மாணவர் யாதவ், 18. இவர் கடந்த மார்ச் 19ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில், பலத்த காயமடைந்தார்.
கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும், கடந்த 22ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர் நாகராஜன், விஜயலட்சுமி, அக்கா மோனிஷா மாணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், தோல் மற்றும் எலும்பு தானமாக பெறப்பட்டன. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள், கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், தோல் மற்றும் எலும்பு, மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கே.எம்.சி.எச்., உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு ஏற்ப, திறம்பட செயல்பட்டு தகுந்த நேரத்தில் அனுப்பிவைத்தனர். இதன்மூலம், ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
உடல் உறுப்புகளை தானம் செய்த மாணவர் குடும்பத்தினருக்கு, கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி நன்றி தெரிவித்தார்.