/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கக வேளாண்மை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்
/
அங்கக வேளாண்மை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்
ADDED : அக் 17, 2025 11:11 PM
பொள்ளாச்சி: அங்கக வேளாண் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம், வரும், 28ம் தேதி துவங்குகிறது.
வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், அங்கக வேளாண் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம், வரும், 28ம் தேதி முதல் டிச. 1ம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.
இப்பயிற்சியில், இடுபொருள் உற்பத்தி முறைகளான பஞ்சகாவியா, தசகாவ்யா, மீன் அமிலம், ஐந்திலை கரைசல், மண்புழு உர உற்பத்தி, வேர் உட்பூசனம் உற்பத்தி பற்றி செயல்முறை விளக்கம், அங்கக வேளாண்மை செய்யக்கூடிய விவசாயிகளின் கண்டுணர்வு சுற்றுலாவும் உள்ளது.
இதில், 18 வயது முதல், 45 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்திய திறன் மேம்பாட்டு கழக முதுநிலை விஞ்ஞானி கோமதி தொழில்நுட்ப முறை குறித்து விளக்கமளிக்கிறார்.
முன்பதிவுக்கு சுரேஷ்குமார் - 78128 03805, பவித்ரா -- 90477 56077 ஆகியாரை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் அறிவியல் இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.