/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விபத்தில் மரணமடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்
/
சாலை விபத்தில் மரணமடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மரணமடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மரணமடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்
ADDED : மார் 23, 2025 11:45 PM

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் விபத்தில் மூளைச்சாவடைந்த, 20 வயது இளைஞர் ராம்தர்ஷன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
திருப்பூர் வெள்ளியம்பதி பகுதியை சேர்ந்த, திருநாவுக்கரசு - தனலட்சுமி தம்பதியர் மகன் ராம்தர்ஷன். இருசக்கர வாகனத்தில் சென்ற போது, விபத்தில் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனளிக்காத நிலையில், டாக்டர்கள் குழு, ராம்தர்ஷன் மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர். குடும்பத்தார் ஒப்புதலின் பேரில், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
ஒரு சிறுநீரகம், கண்கள், கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
உயிரிழந்த, ராம்தர்ஷன் உடலுக்கு மருத்துவமனை சார்பில், மலர் துாவி மரியாதை செலுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.