/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பிற துறைகள்... கானல் நீராகும் ஒருங்கிணைந்த மருத்துவமனை திட்டம்
/
அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பிற துறைகள்... கானல் நீராகும் ஒருங்கிணைந்த மருத்துவமனை திட்டம்
அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பிற துறைகள்... கானல் நீராகும் ஒருங்கிணைந்த மருத்துவமனை திட்டம்
அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பிற துறைகள்... கானல் நீராகும் ஒருங்கிணைந்த மருத்துவமனை திட்டம்
ADDED : டிச 28, 2025 05:05 AM

கோவை, அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், பிற அரசு துறைகளுக்கு தொடர்ந்து இடம் ஒதுக்கி வருவதால், அங்கு ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகம் கட்டும் திட்டம் கைவிடப்படலாம் என டாக்டர்கள், பொதுமக்கள் கவலைப்படுகின்றனர்.
அவினாசி சாலையில், 153 ஏக்கர் பரப்பில் துவங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லுாரி, 30க்கு மேற்பட்ட துறைகளுடன் செயல்படுகிறது. 'டைடல் பார்க்' கட்டுவதற்காக அந்த வளாகத்தில் 60 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டது. இதனால் மருத்துவ கல்லுாரி வளாகத்தின் பரப்பு 75 ஏக்கராக குறைந்தது.
அடுத்து, சமூக நல துறையின் 'ஒன் ஸ்டாப் சென்டர்' கட்டடம் கட்ட, மருத்துவக்கல்லுாரி மைதானம் அருகே இடம் ஒதுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. அதையடுத்து, அரசின் தோழிகள் தங்கும் விடுதி கட்ட 50 சென்ட் ஒதுக்கப்பட்டது. அதுவும் வேகமாக கட்டப்படுகிறது.
லேட்டஸ்டாக, மருந்து கட்டுப்பாட்டு துறையின் உபகரணங்கள் ஆய்வகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டடம் கட்டி முடித்ததும், இன்னொரு துறைக்கு இன்னொரு இடம் ஒதுக்கப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இப்படியே தானம் செய்து கொண்டிருந்தால், மருத்துவ கல்லூரியையே வேறு இடத்துக்கு மாற்ரி விடுவார்கள் போலிருக்கிறது என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
நகரின் மையத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம் இட நெருக்கடியில் திணறும் சூழலில், அதற்கு தீர்வாக 1000 படுக்கை கொண்ட புதிய துணை மருத்தவமனை வளாகம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்படும் என கூறப்பட்டது. சென்னை போன்று முதியோருக்கான பிரத்யேக மருத்துவமனை, புற்றுநோய் சிறப்பு மையம் ஆகியவை புதிய வளாகத்தில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
நீண்டநாட்களாக முன்வைக்கப்படும் இந்த கோரிக்கைகள் குறித்து எந்த முயற்சியும் எடுக்காமல், தொடர்ந்து பிற துறைகளுக்கு இடம் ஒதுக்குவது டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற டாக்டர்கள் சிலர் கூறுகையில், '153 ஏக்கர் இருந்த மருத்துவ கல்லுாரி வளாகம் இன்று 20 ஏக்கருக்கும் கீழே வந்துவிட்டது. புதிய மருத்துவமனை அமைக்க அரசு பச்சைக்கொடி காட்டினாலும், இடம் போதாது என்ற பதில் வரக்கூடிய அபாயம் உள்ளது' என்றனர்.
ரயில் நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம், 18 ஏக்கர் பரப்பில் கடுமையான இடநெருக்கடியில் உள்ளது. பயிற்சி டாக்டர்கள் தங்குவதற்கே இடமில்லை, பார்க்கிங் வசதி இல்லை, போதுமான வார்டுகள், ஆப்பரேஷன் தியேட்டர்கள் இல்லை. எனவே, துணை மருத்துவ வளாகம் அமைக்காமல் பிற துறைகளுக்கு தொடர்ந்து இடம் ஒதுக்கீடு செய்வது சரியல்ல, என்றனர்.
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, '1000 படுக்கை வசதியுடன் இங்கே புதிய அரசு மருத்துவமனை கட்டுவது பற்றி 15 ஆண்டுக்கு முன் ஆலோசிக்கப்பட்டது; அதை இப்போது என்னிடம் கேட்டால் என்ன பதில் கூறுவது?' என்றார்.

