தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘எங்கள் வார்டு எங்கள் தீர்வு’ அக்.14ம் தேதி ஹேக்கத்தான்

‘எங்கள் வார்டு எங்கள் தீர்வு’ அக்.14ம் தேதி ஹேக்கத்தான்

‘எங்கள் வார்டு எங்கள் தீர்வு’ அக்.14ம் தேதி ஹேக்கத்தான்


ADDED : செப் 14, 2026 05:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநகராட்சி மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், ‘எங்கள் வார்டு எங்கள் தீர்வு’ எனும் அறிவியல் தொழில்நுட்ப ஹேக்கத்தான், அக்.14ல் நடக்கிறது.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் தினசரி பிரச்னைகளுக்கு, மாணவர்களின் அறிவியல் சிந்தனை, புதுமையான அணுகுமுறையால் தீர்வு காண்பதே இதன் நோக்கம்.

10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தனியாக அல்லது இருவர் கொண்ட குழுவாக பங்கேற்கலாம்.

தாங்கள் வசிக்கும் அல்லது படிக்கும் வார்டு மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளை தேர்வு செய்து, அதனை கேள்வியாக உருவாக்கி, அறிவியல் பூர்வமான தீர்வை தயாரிக்கலாம். நிகழ்வன்று தீர்வு முன்மொழிவை நடுவர் குழுவினரிடம் சமர்ப்பித்து விளக்க வேண்டும்.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தேர்வு செய்த பிரச்னை, அதற்கான சுருக்கமான அறிவியல் தீர்வை வரும் 30க்குள், coimbatoresciencecongress@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

விரிவான திட்ட அறிக்கையை அக்., 14ல் சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 77083 73483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழ்நாடு அறிவியல் இயக்க கோவை மாவட்டத் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us